கொள்ளு பணியாரம்என்னென்ன தேவை?

கொள்ளு - 1 கப்,
புழுங்கல் அரிசி - 2 கப்,
பச்சரிசி - 1/2 கப்,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்,
வெள்ளை எள் - சிறிது,
 நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கப்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கொள்ளு, புழுங்கல் அரிசி, பச்சரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து  உப்பு, எள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். தேவையானால் சிறிது புளிக்க வைக்கலாம். அதனுடன் பச்சைமிளகாய்,  கொத்தமல்லி சேர்த்து கலந்து குழிப்பணியாரச் சட்டியை சூடாக்கி நல்லெண்ணை விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்து  பரிமாறவும்..