வாய் ருசிக்கு வகை வகையாய் பணியாரங்கள்‘‘சமையல் என்றாலே அதில் செட்டிநாட்டு சமையலுக்கு தனிச் சிறப்புண்டு. நான் பிறந்து வளர்ந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தைச்   சேர்ந்தது என்பதால், எங்கள் சமையலில் செட்டிநாட்டு கை பக்குவம் இயல்பாகவே கலந்திருக்கும். நாங்கள் சமைக்கும் உணவுகளில்  மனமும், சுவையும் எப்போதும் தூக்கலாக தனித்துவத்துடன் இருக்கும். 
மேலும், காரைக்குடி, செட்டிநாடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்  விதவிதமான பணியாரங்களைச் செய்வதில் கைதேர்ந்தவர்கள். வீட்டிற்கு விருந்தினர் வந்தால், விருந்தினர் உபசரிப்பிற்காகத் துணைப்  பலகாரமாக கண்டிப்பாக ஏதாவது ஒரு பணியாரம் இலையில் இடம் பெற்றிருக்கும்’’ என்கிறார் இந்திரா.ருசியும் மணமும் நிறைந்த  செட்டிநாட்டுப் பணியாரங்களில் 30 வகையினை எப்படிச் செய்வது என்பதை தோழி வாசகர்களுக்காக இவர் செய்து காட்டுகிறார்.

தொகுப்பு:
ருக்மணிதேவி நாகராஜன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி