பவுண்டி பார்ஸ்



என்னென்ன தேவை?

உலர்ந்த தேங்காய்த்துருவல் - 1 கப்,
வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை இல்லாத கோவா - 2 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 2 டீஸ்பூன்,
சாக்லெட் கிரீம் - 1/4 கப்.

எப்படிச் செய்வது?


கடாயில் தேங்காய்த்துருவல், வெண்ணெய் சேர்த்து லேசாக வறுத்து, அதில் கோவா, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கெட்டியாக  வரும் வரை கிளறி இறக்கவும். ஆறியதும் சிலிண்டர் வடிவத்தில் உருட்டி ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். சாக்லெட் கிரீமை டபுள்  பாயிலிங் முறையில் தயாரித்து, அதில் இந்த தேங்காய் உருளையை முக்கியெடுத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து செட் ஆனதும் எடுத்து  பரிமாறவும்.