சோயா சாக்கோ எனர்ஜி பார்



என்னென்ன தேவை?

ஃப்ரைடு சோயா கிரானுவல்ஸ் - 1/4 கப்,
ஓட்ஸ் மாவு - 1/4 கப்,
பொடித்த பிரவுன் சுகர் - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன், விருப்பமான டிரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் - 2 டீஸ்பூன்,
சாக்லெட் கிரீம் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?


நான்ஸ்டிக் தவாவில் வெண்ணெய், பிரவுன் சுகர் சேர்த்து உருக்கி, சர்க்கரை கரைந்ததும் சோயா கிரானுவல்ஸ், ஓட்ஸ் மாவு, டிரை  ஃப்ரூட்ஸ், நட்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை வெண்ணெய் தடவிய ஒரு டிரேயில் கொட்டி சமமாக பரப்பி ஆறவிடவும்.  அதன் மீது சாக்லெட் கிரீம் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.