முஸ்லி சாக்கோ ஹெவன்



என்னென்ன தேவை?

முஸ்லி - 1 கப்,
ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன்,
பொடித்த பிரவுன் சுகர் - 1/4 கப்,
தேன் - 2 டீஸ்பூன்,
மில்க் சாக்லெட் கிரீம் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு பவுலில் முஸ்லி, தேன், பிரவுன் சுகர், ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து, டிரேயில் கொட்டி சமப்படுத்தி செட்  ஆனதும் துண்டுகள் போட்டு சாக்லெட் கிரீமில் முக்கியெடுத்து ஃப்ரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.