ஐஸ்கிரீம் சாண்ட்விச்



என்னென்ன தேவை?

கோகோ  பிஸ்கெட் - 6,
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் - 1/4 கப்,
சாக்லெட் சிரப் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கோகோ பிஸ்கெட்களில் நடுவில் இருக்கும் கிரீம் லேயரை எடுத்து ஐஸ்கிரீமுடன் சேர்த்து கலந்து ஃப்ரீசரில் வைக்கவும். பிஸ்கெட்டையும்  ஃப்ரீசரில் வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து பிஸ்கெட்டில் சிறிது சாக்லெட் சிரப் தடவி, நடுவில் ஐஸ்கிரீம் வைத்து மீண்டும் ஃப்ரீசரில்  ஒரு டப்பாவில் அடுக்கி வைக்கவும். விரைவில் உருகி விடும் என்பதால் சாப்பிடுவதற்கு முன் ஃப்ரீசரில் இருந்து எடுத்து பரிமாறவும்.