காசிமேடு சங்கரா மீன் வறுவல்
என்னென்ன தேவை?
சங்கரா மீன் - 1/2 கிலோ, நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், சீரகம், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், பூண்டு - 5 பல், சாம்பார் வெங்காயம் - 6, உப்பு - தேவைக்கு.
தோசைக்கல் மசாலா வறுத்து அரைக்க...
காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு - தலா 25 கிராம்.
எப்படிச் செய்வது?
தோசைக்கல்லில் நல்லெண்ணெயை காயவைத்து, சீரகம், வெந்தயம், பொடியாக நறுக்கிய பூண்டு, சாம்பார் வெங்காயம் வதக்கி அதனுடன் மீன், அரைத்த மசாலா சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து சூடாக பரிமாறவும்.
|