இறால் ஃப்ரைடு ரைஸ்



என்னென்ன தேவை?

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3,
பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், பீன்ஸ் - 1 கப்,
நறுக்கிய இஞ்சி பூண்டு - தலா 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 5,
இறால் - 1 கப்,
முட்டை - 1,
சோயாசாஸ் - 1/2 டீஸ்பூன்,
உதிர் உதிராக வடித்த பாஸ்மதி சாதம் - 1 கப்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
வெங்காயத்தாள் - 1/4 கப்,
உப்பு -  தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், குடைமிளகாய், கேரட், பீன்ஸ், இஞ்சி பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி இறால், முட்டை,  சோயாசாஸ் ஊற்றி கலந்து சாதம், மிளகுத்தூள், வெங்காயத்தாள் கலந்து சூடாக பரிமாறவும்.