சுவையான கடல் உணவுகள்பொதுவாக கடல் உணவுகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். அதிலும் இவற்றில்  மருத்துவ குணங்கள் ஏராளம் உண்டு.

ஆகவேதான் மருத்துவர்களின் இறைச்சி பரிந்துரையில் கடல் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மீன்,   இறால், நண்டு பிரியர்கள் அதிகம் என்றே சொல்லலாம். பெரும்பாலும் மீன் குழம்பு, மீன் வறுவல்தான் நாம் அதிகம் உண்டிருப்போம்.  அந்தந்த கால கட்டங்களில் கிடைக்கும் கடல் உணவுகளை வாங்கி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையாக சமைக்கலாம் என்கிறார்  சமையல் கலைஞர் சுரேஷ் சின்னசாமி.எளிமையான முறையில் 30 வகை கடல் உணவுகளை செய்வது எப்படி என்பதை தோழி  வாசகர்களுக்கு செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் சுரேஷ் சின்னசாமி.

தொகுப்பு: ஜெ.சதீஷ்
எழுத்து வடிவம்: கே.கலையரசி