ஸ்மைலி லாலிபாப்



என்னென்ன தேவை?

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்,
சோள மாவு, அரிசி மாவு - தலா 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
சீஸ் துருவல், ரஸ்க் தூள் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
லாலிபாப் குச்சி அல்லது ஐஸ் குச்சிகள்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, உப்பு, ரஸ்க் தூள், சீஸ் துருவல், அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்தூள் சேர்த்து பிசையவும். எலுமிச்சை  அளவு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி சிறிய மூடி அல்லது வட்ட வடிவ பிஸ்கெட் கட்டரால் அழுத்தம் தந்து எடுக்கவும். வாய்  பகுதிக்கு ஸ்பூனால் `U’ போடவும். கண்ணிற்கு அழுத்தம் தரவும். ஸ்மைலி உருவம் தயார். இதை சூடான எண்ணெயில் போட்டு  பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கீழ்புறம் ஐஸ்குச்சி சொருகி, வாய் பகுதிக்கு தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும்.