மினி டோனட்ஸ் லாலிபாப்



என்னென்ன தேவை?

வெதுவெதுப்பான பால் - 1/2 கப்,
ஈஸ்ட் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - சிறிது,
உருகிய வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
சாக்கோ ஸ்பிரெட் - 2 டேபிள்ஸ்பூன்,
டூட்டிஃப்ரூட்டி, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பெரிய பவுலில் பால், சர்க்கரை, உப்பு, ஈஸ்ட், வெண்ணெய் போட்டு கலந்து கோதுமை மாவு சேர்த்து  நன்றாக பிசைந்து 1 மணி நேரம்  அப்படியே வைக்கவும். ஈஸ்ட்  இருப்பதால் மாவின் மடங்கு அதிகமாகி பொங்கும். அதை எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து தட்டி  டோனட் கட்டரால் அழுத்தி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மேலே சாக்கோ ஸ்பிரெட் தடவி, டூட்டிஃப்ரூட்டி தூவி கீழே  குச்சி சொருகி பரிமாறவும்.குறிப்பு: டோனட் கட்டர் இல்லாவிட்டால் வட்ட மூடியால் அழுத்தி எடுத்து நடுவில் ஓட்டை விழும் மாதிரி  சிறிய மூடியால் அழுத்தம் தந்து எடுக்கவும்.