வீட் லாலிபாப்



என்னென்ன தேவை?

கோதுமை ரவை - 1 கப்,
இனிப்பு கோவா - 1/2 கப்,
பால் - 2 கப்,
நெய் - சிறிது,
காய்ந்த திராட்சை,
டூட்டிஃப்ரூட்டி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/4 கப்,
அலங்கரிக்க ஜெம்ஸ் மிட்டாய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் கோதுமை ரவையை போட்டு வறுத்து எடுக்கவும். அடிகனமான கடாயில் பால், சிறிது தண்ணீர்  ஊற்றி கொதிக்க விட்டு சிறு தீயில் வைத்து வறுத்த ரவையை போட்டு கிளறவும். பின்பு உதிர்த்த கோவா, நெய் சேர்த்து கிளறி திராட்சை,  டூட்டிஃப்ரூட்டி போட்டு கிளறவும். ரவை வெந்ததும் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி இறக்கவும். லாலிபாப் மோல்டில் போட்டு அழுத்தி   வைத்து அடியில் லாலிபாப் குச்சி சொருகி 10 நிமிடம் கழித்து மோல்டிலிருந்து எடுத்து நடுவில் ஜெம்ஸ் மிட்டாய் வைத்து அலங்கரித்து  பரிமாறவும்.