பிரவுனி லாலிபாப்



என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு, வெல்லத் துருவல் - தலா 1/2 கப்,
நெய் - சிறிது,
பிரவுனி கேக் உதிர்த்தது - 1/4 கப்,
கிராம்பு - 2,
அலங்கரிக்க கலர் இனிப்பு சேமியா - சிறிது,
வறுத்து பொடித்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
லாலிபாப் ஸ்டிக், விருப்பமான வடிவ லாலிபாப் மோல்டு.

எப்படிச் செய்வது?


கடாயில்  நெய்  ஊற்றி  கேழ்வரகு மாவை போட்டு நன்றாக வறுத்து எடுத்து ஆறவிடவும். மற்றொரு கடாயில் வெல்லத்துருவல், சிறிது  தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பாகு பதத்திற்கு வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து உடைத்த கிராம்பு, வறுத்த கேழ்வரகு  மாவு, நெய், முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு கலவை, கேக் சேர்த்து கிளறி லாலிபாப் மோல்டில்  போட்டு அழுத்தி மேலே கலர் சேமியா தூவி, கீழ்புறம் குச்சி சொருகி 10 நிமிடம் கழித்து மோல்டிலிருந்து எடுத்து பரிமாறவும்.