தேங்காய்ப்பால் முறுக்கு



என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப், குண்டு உளுந்து - 1/4 கப்,
தேங்காய்ப்பால் - 1½ கப்,
எள் - 1 டீஸ்பூன் அல்லது ஓமம் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 கப்,
வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை சுத்தம் செய்து கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர்த்தவும். பின்பு உளுந்துடன் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த மாவு, உப்பு, எள், வெண்ணெய் சேர்த்து கலந்து தேங்காய்ப்பால் ஊற்றி பிசைந்து கொள்ளவும். மாவை முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக, மொறுமொறுப்பாக பொரித்  தெடுத்து பரிமாறவும்