சிறுதானிய சாலட்



என்னென்ன தேவை?

பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, கொள்ளு - தலா 1 டீஸ்பூன்,
தக்காளி - 1,
வெள்ளரிக்காய் - பாதி அளவு,
எலுமிச்சைப்பழம் - பாதி பழம்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, கொள்ளு மூன்றையும் ஒரு நாள் முழுக்க ஊறவைத்து, மறுநாள் தண்ணீரை வடித்து ஒரு மெல்லிய துணியில் மூட்டையாக கட்டி வைக்கவும். அடுத்த நாள் முளை வந்ததும் அதை எடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி கலந்து பரிமாறவும்.