பனீர் டிக்கா



என்னென்ன தேவை?

மேரினேட் செய்ய...

கெட்டித்தயிர் - 1/2 கப்,
மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், கஸ்தூரி மேத்தி, சாட் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
எண்ணெய், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கடுகு எண்ணெய் - தலா 1 டீஸ்பூன்,
சீரகத்தூள், ஓமம் - 1/4 டீஸ்பூன்,
லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு, வெங்காயம், குடைமிளகாய் - தலா 1/2 துண்டு,
பனீர் - 250 கிராம்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.

டிக்கா செய்ய...

வுட்டன் ஸ்க்யூவர் - 3,
கரித்துண்டு - 1,
நெய் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பனீர், வெங்காயம், குடைமிளகாயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கவும். வுட்டன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து ஓமம், கடலை மாவு சேர்த்து கிளறி எடுக்கவும். தயிருடன் இந்த கலவையை சேர்த்து, மேரினேட் செய்ய கொடுத்த  அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கடுகு எண்ணெயை சூடாக்கி ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த கலவையில் பனீர் துண்டுகள், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும். ஸ்க்யூவரில் பனீர், வெங்காயம், குடைமிளகாயை  சொருகி டிக்காக்களை ரெடி செய்து கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு செய்த டிக்காக்களை வைத்து இதன் நடுவில் ஒரு  கிண்ணத்தில் சூடான கரித்துண்டில் நெய் விட்டு வைக்கவும். பிறகு மூடி போட்டு டிக்காக்களை சுட்டு எடுக்கவும். இடை இடையே டிக்காக்களை  திருப்பி விடவும்.