தக்காளி சூப்



என்னென்ன தேவை?

சூப் செய்ய...

எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய், கார்ன்ஃப்ளார் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
மீடியம் சைஸ் வெங்காயம் - 1,
கேரட் - 1/2 துண்டு,
தக்காளி - 12,
செலரி - 2 டீஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
முழு மிளகு - 6, உப்பு,
மிளகுத்தூள் - தேவைக்கு,
மலாய் - 1/2 கப்,
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.

குரூட்டான்ஸ் செய்ய...

பிரெட் - 2,
வெண்ணெய் - 6-7 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் + வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை, வெங்காயம், செலரி, கேரட், பூண்டு, தக்காளி, உப்பு, முழு மிளகு சேர்த்து மூழ்கும்  அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறவைத்து பிரிஞ்சி இலையை நீக்கி விட்டு மிக்சியில் நைசாக அரைத்து  வடித்தெடுத்து கொள்ளவும்.

மீண்டும் கடாயில் ஊற்றி தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். சூப் நன்கு கொதித்ததும், (தண்ணியாக இருந்தால் கார்ன்ஃப்ளாரை  கரைத்து ஊற்றி திக் செய்யலாம்.) கடைசியாக திக் கிரீம் (மலாய்) சேர்த்து கிளறி இறக்கவும். குரூட்டான்ஸ் செய்ய, கடாயில் வெண்ணெய் சேர்த்து  உருகியதும் நறுக்கி வைத்துள்ள பிரெட் துண்டுகளை பொரித்தெடுக்கவும். சூப்பை குரூட்டான்ஸு டன் பரிமாறவும்.