சிக்கன் பிரெட் ரோல்



என்னென்ன தேவை?

பிரெட் - 8 துண்டுகள்,
துருவிய மொசரெல்லா சீஸ் - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
மல்லித்தழை - 1 கைப்பிடி, சிக்கன் அல்லது உருளைக்கிழங்கு - 250 கிராம்,
உப்பு - தேவைக்கு,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


சிக்கனை வேகவைத்து பொடிப் பொடியாக நறுக்கி, அதனுடன் வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், மல்லித்தழை, சீஸ் சேர்த்து நன்றாக பிசறி வைக்கவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு தண்ணீரில் சிறிது நனைத்து, தண்ணீரை நன்றாக இரு கைகள் கொண்டு அழுத்தி எடுத்து விட்டு, சிக்கன் கலவையை உள்ளே வைத்து மூடி நன்கு உருட்டி அரைமணி நேரம் வைக்கவும். சூடான எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பிரெட் உருண்டையை போட்டு பொரித்தெடுத்து சூடாக சாஸுடன் பரிமாறவும். சிக்கனுக்கு பதில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து செய்யலாம்.