ஸ்டஃப்டு பனீர் பரோட்டா



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 500 கிராம்,
பனீர் துருவல் - 200 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
சிறிய உருளைக்கிழங்கு - 1,
கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மட்டன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - ேதவைக்கு,
மல்லித்தழை - 1 கைப்பிடி.

எப்படிச் செய்வது?


கோதுமை மாவு, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு போட்டு கலந்து வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி சிறிது  மிருதுவாக மாவு பதத்திற்கு பிசையவும். அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி 1 மணி நேரம் மூடி வைக்கவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பனீர், வேகவைத்து துருவிய  உருளைக்கிழங்கு, உப்பு, மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். ஆறியதும் பெரிய  உருண்டைகளாக  உருட்டி  கொள்ளவும்.பிசைந்த மாவிலிருந்து உருண்டையாக எடுத்து சிறிது தட்டி, நடுவில் பனீர் உருண்டையை வைத்து மூடி  மெதுவாக சாப்பாத்தியாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய்  ஊற்றி வேக வைத்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.