பச்சைப்பயறு இட்லி



என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
பச்சைப்பயறு - 1/4 கிலோ,
பச்சைமிளகாய் - 4,
பெரிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப்பயறை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் முளைக்கட்டி வைக்கவும். பின் இரண்டு நாள் கழித்து முளை வந்ததும், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கி, பச்சைப்பயறை சேர்த்து கிளறி இறக்கவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் பச்சைப்பயறு மசாலாவைத் தூவி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.