கொண்டைக்கடலை இட்லிஎன்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
கொண்டைக்கடலை - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 3,
கறிவேப்பிலை, கடுகு - சிறிது,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை ஊறவைத்து முளைக்கட்டி வைக்கவும். முளை வந்ததும், குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேகவிட்டு எடுக்கவும். இட்லி மாவில் வெந்த கொண்டைக்கடலை கலவை கொட்டி கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.