விதவிதமான இட்லிகள்உடம்புக்கு சரியில்லாதவர்களுக்குக் கூட சாப்பிட கொடுக்கும் ஒரு முக்கிய உணவு வகை இட்லி. இந்திய உணவு வகைகளில் குறிப்பிடத் தகுந்ததும் இட்லிதான். இட்லியில் எத்தனை வகை செய்ய முடியுமோ அத்தனை வகைகள் செய்து உலக சாதனை படைத்திருக்கிறார் இனியவன். இட்லி கண்காட்சிகளை பல இடங்களில் நடத்தி இருக்கிறார்.

ரிக் ஷா ஓட்டுனராக இருந்தவர் உலகத்தில எடை அதிகமுள்ள இட்லியை செய்து காட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். அவர் இங்கே 30 வகை இட்லி வகைகளை நமக்காக செய்து காட்டி இருக்கிறார். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த இட்லி வகைகளை செய்து கொடுக்கலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி