ரங்கோலி முத்து வடகம்என்னென்ன தேவை?

ஜவ்வரிசி - 250 கிராம்,
பச்சரிசி மாவு - 1/4 கப்,
பச்சைமிளகாய், சீரகம் விழுது - 2 டீஸ்பூன்,
ஃபுட் கலர் - சிறிது.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை ஊறவைக்கவும். பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து பச்சைமிளகாய், சீரக விழுது, பச்சரிசி மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். கலவையை தனித்தனியாக பிரித்து விருப்பமான ஃபுட் கலரை சேர்த்து கலந்து கரண்டியால் எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.