நெல்லிக்காய் வடகம்



என்னென்ன தேவை?

நெல்லிக்காய் - 1 கப்,
பச்சைமிளகாய் விழுது, உப்பு - தலா 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 4 கப்,
ஜவ்வரிசி விழுது - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

நெல்லிக்காயை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, நெல்லிக்காய் விழுது, உப்பு போட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து பொரித்தெடுக்கவும்.