சம்மர் ஸ்பெஷல்: வற்றல் - வடகம்வெயில் சீசன் வந்தாலே ஊறுகாய், வடகம், வற்றல் போன்றவற்றை வீடுகளில் போடுவது வழக்கம். இப்போது போட்டு வைத்தால் வருடம் முழுவதும் உதவியாக இருக்கும். சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி வடகம் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட். “நான் போடுகிற வடகம் வித்தியாசமாக இருக்கும். ஆரோக்கியமான வற்றல் வகைகளாக இருக்கும். ஏதோ சமைத்தோம், சாப்பிட்டோம் என்று இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியமாக சமைத்து சாப்பிட்டால் எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். வகை வகையாக வற்றல் வகைகளை செய்து நல்லா சாப்பிடுங்க” என்று நமக்காக இங்கே வற்றல், வடகம்  வகைகள் முப்பதை செய்து காட்டி இருக்கிறார்.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: ஆர்.கோபால்