பானகம்என்னென்ன தேவை?

பனைவெல்லம் - 1 கப்,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள்,
சீரகத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

புளியை கரைத்து வடிகட்டவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் அனைத்து பொடிகளையும் கலந்து இறக்கவும். பின்பு புளி சாறு, எலுமிச்சைச்சாறு கலந்து ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறவும்.