ஃப்ரூட் சாலட்என்னென்ன தேவை?

நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம், விதையில்லாத பச்சை, கருப்பு திராட்சை, தர்பூசணி துண்டுகள், முலாம் பழ துண்டுகள் - அனைத்தும் சேர்த்து 2 கப்,
தேன், கன்டென்ஸ்டு மில்க் - தலா 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அனைத்து பழங்களின் விதை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி தேன், கன்டென்ஸ்டு மில்க், சீரகத்தூள் கலந்து குளிரவைத்து பரிமாறவும்.