ஆரஞ்சு ஐஸ்கிரீம்என்னென்ன தேவை?

கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின்,
ஆரஞ்சு சாறு - 1 கப்,
பால் - 1½ கப்,
நறுக்கிய ஆரஞ்சு பழ சுளைகள் - 1½ டீஸ்பூன்,
செர்ரி பழம் - சிறிது.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், பால், ஆரஞ்சு சாறு கலந்து நன்கு பீட் செய்து எசென்ஸ் சேர்த்து கலக்கவும். பின் ஐஸ்கிரீம் டிரேயில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்கு முக்கால் பதத்திற்கு செட் ஆனதும் வெளியே எடுத்து மீண்டும் நன்கு அடித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின் கண்ணாடி கிண்ணங்களில் போட்டு நறுக்கிய பழங்களால் அலங்கரித்து பரிமாறவும்.