கூல் கூல் ரெசிபீஸ்விடுமுறைக் கொண்டாட்டம் தொடங்கியாச்சு. வெயில் காலத்தில் குழந்தைகள் ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் எல்லாம் சாப்பிட ஆசைப்படுவாங்க. அதை வெளியில் வாங்கும் போது செலவு அதிகம் ஆகும். அதுமட்டுமில்லாமல் அது சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்டதா? சுகாதாரமானதுதானா என்றெல்லாம் கவலைப்பட வேண்டி இருக்கும். அதற்கு பதில் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை நாமே வீட்டிலே செய்தாலே என்ன? என்கிறார் சமையல் கலைஞர் உஷா குமாரி. “சமையல் செய்வது, பரிமாறுவது, போட்டி களில் கலந்து கொள்வது மிகவும் பிடிக்கும். நிறைய சமையல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளேன்.

சமையல் வகுப்பும் எடுக்கிறேன். என்னுடைய சமையல் குறிப்புகள் பல பத்திரிகைகளில் இடம் பெற்று உள்ளன. தொலைக்காட்சிகள் நடத்திய சமையல் போட்டிகளிலும் கலந்து கொண்டு இருக்கிறேன். சென்னையில் உணவுத் திருவிழா நிகழ்ச்சியில் சமையல் போட்டிகளை 5 வருடமாக ஒருங்கிணைத்திருக்கிறேன்” எனும் உஷா குமாரி இங்கே பிள்ளைகளுக்குப் பிடித்தமான ஜூஸ், கீர், ஃப்ரூட் சாலட் என செய்து அசத்தி இருக்கிறார்.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: ஆர்.கோபால்