தர்பூசணி ரசம்



என்னென்ன தேவை?

தர்பூசணி - 200 கிராம்,
புளிக்கரைசல் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
குழைய வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு,
நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்.

வறுத்து அரைக்க...

தனியா - 1   டேபிள்ஸ்பூன்,
மிளகு - 2 டீஸ்பூன்,
சீரகம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.

தாளிக்க...

நெய், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தர்பூசணியை தோல், விதை நீக்கி மிக்சியில் அடித்து வடிகட்டி ஜூஸ் எடுத்து கொள்ளவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்த பொருட்களை வறுத்து கரகரப்பாக அரைக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி போட்டு லேசாக கொதி வந்ததும் தர்பூசணி ஜூஸ் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரைத்த பொடியை சேர்த்து மேலும் ஒரு கொதி விடவும். துவரம்பருப்பை, ஒரு கரண்டி நீர் விட்டு கரைத்து அதையும் கொதிக்கும் ரசத்தில் ஊற்றி, தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி இறக்கி மல்லித்தழையை தூவி பரிமாறவும்.