மாங்காய் குடைமிளகாய் பாத்



என்னென்ன தேவை?

உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப்,
புளிப்பில்லாத கெட்டியான மாங்காய் - 1,
குடைமிளகாய் - பாதி,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 1, கறிவேப்பிலை - 1 கொத்து,
நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மாங்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். கடா யில் எண்ணெய் ஊற்றி சூடா னதும் காய்ந்தமிளகாய், பெருங் காயத்தூள், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளித்து உப்பு, மாங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும். பின்பு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து வதக்கி சாதம் போட்டு கிளறி மல்லித்தழையை தூவி இறக்கவும். சிப்ஸுடன் பரிமாறவும்.