பலாக்கொட்டை பொடிமாஸ்



என்னென்ன தேவை?

தோல் நீக்கி நறுக்கிய பலாக்கொட்டை - 1½ கப்,
பெரிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சித்துருவல் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், சாட் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு - தலா 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பலாக்கொட்டையை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைக்கவும். வெந்ததும் சப்பாத்திக் குழவியால் ஒன்றிரண்டாக நசுக்கவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி சீரகம் தாளித்து நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயம், இஞ்சித்துருவலை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், தனியாத்தூள், பலாக்கொட்டை சேர்த்து வதக்கி சாட் மசாலாத்தூள், மல்லித்தழை தூவி இறக்கவும். விரும்பினால் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.