வேப்பம்பூ ரசம்



என்னென்ன தேவை?

வேப்பம்பூ - 3 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பு, கடுகு - தலா 1/4 டீஸ்பூன்,
புளிக்கரைசல், உப்பு - தேவைக்கு,
கடலை எண்ணெய் - 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
நெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நெய்யில் வேப்பம்பூவை வறுத்து எடுக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், மிளகு, சீரகம், தனியா,  துவரம்பருப்பு இவற்றை வறுத்து மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, புளிக்கரைசல், உப்பு போட்டு கலந்து அடுப்பை சிம்மில் வைத்து, ரசம் நுரைத்து வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். வறுத்த வேப்பம்பூவை மேலே தூவி பரிமாறவும்.