சுரைக்காய் அடை



என்னென்ன தேவை?

வரகு - 400 கிராம்,
பொடியாக நறுக்கிய சுரைக்காய் - 1 டம்ளர்,
துவரம்பருப்பு - 100 கிராம்,
கடலைப்பருப்பு - 50 கிராம், மிளகாய்த்தூள்,
உப்பு - தேவைக்கு,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
கடலை எண்ணெய் - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

வரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சிறிது புளித்த பின் சூடான தவாவில் அடைகளாக வார்த்து எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.