பாகற்காய் வதக்கல்என்னென்ன தேவை?

பாகற்காய் - 1/4 கிேலா,
பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 10,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
உப்பு - தேவைக்கு,
கடலை எண்ணெய் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் சாம்பார் பொடி, பூண்டு, சீரகம் போட்டு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு தாளித்து சிறு தீயில் வைத்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி பாகற்காய் துண்டுகளை போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கிளறி வேகவைக்கவும். கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, உப்பு போட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.