கொய்யாப்பழக் கூட்டுஎன்னென்ன தேவை?

கொய்யாப்பழம் - 5, மிளகுத்தூள்,
மிளகாய்த்தூள் - தலா 5 கிராம்,
ஏலக்காய்த்தூள், கிராம்புத்தூள்,
பட்டைத்தூள் - தலா 2 சிட்டிகை,
ஆலிவ் எண்ணெய் - 25 கிராம்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கொய்யாப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடானதும் கொய்யாப் பழத்துண்டுகளை போட்டு லேசாகக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து மசாலாத்தூள்கள் அனைத்தையும் போட்டு கொய்யாப்பழத்துண்டுகள் உடையாமல் மசாலா நன்கு ஒட்டும் வரை கிளறி இறக்கவும்.