சர்க்கரை நோய்க்கான டயட் உணவுகள்தற்போது பெரும்பாலானவர்களின் தலையாய பிரச்னை சர்க்கரை நோய்தான். குடும்ப பாரம்பரியம், உடல் எடை, உழைப்பின்மை, மன உளைச்சல் ஆகியன சர்க்கரை நோய்க்கான காரணங்களாக இருக்கின்றன. கணையத்தில் இன்சுலினை நன்கு சுரக்கச் செய்வன இன்சுலின் பில்டப் உணவுகள். நமக்காக இன்சுலின் பில்டப் உணவுகளை செய்து காட்டி இருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த  வெ.தாரகை. வருமுன், வந்த பின் என அனைத்து வயதினருமே இவ்வுணவு வகைகளை உண்ணலாம் எனச் சொல்லும் தாரகை ஆசிரியர் படிப்பு படித்திருக்கிறார். ஆனாலும் சமையல் மீது கொண்ட ஆர்வத்தால் பத்திரிகைகளுக்கு சமையல் குறிப்பு, சமையல் ரெசிபிக்கள் எழுதி வருகிறார். பரிசுகளும் வென்றிருக்கிறார்.


தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: பி.பரணிதரன்