பைங்கன் பார்தாஎன்னென்ன தேவை?
 
பெரிய கத்தரிக்காய் - 1,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை - 1 கட்டு, உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பெரிய கத்தரிக்காயில் சுற்றிலும் எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு எடுக்கவும். ஆறியதும் மேல் தோலை உரித்து எடுத்து விட்டு கத்தரிக்காயை மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மசித்த கத்தரிக்காய், உப்பு சேர்த்து கிளறி இறக்கி கொத்தமல்லித்தழை
தூவி பரிமாறவும்.