டொமேட்டோ லென்டில் சூப்என்னென்ன தேவை?

தக்காளி - 2,
பிரிஞ்சி இலை - 2,
ஏலக்காய் - 2,
பச்சைமிளகாய் - 3,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
பூண்டு - 8 பல்,
நறுக்கிய இஞ்சி - 1/2 இன்ச் துண்டு,
வெங்காயம் - 3,
சிறுபருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
பரங்கிக்காய் - 1 பத்தை,
பாலேடு (ஃப்ரெஷ் கிரீம்) - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஃப்ரெஷ் கிரீம் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும். சத்தம் அடங்கியதும் மூடியை திறந்து கலவையை ஆறவைத்து மிக்சியில் அரைத்து வடிகட்டி, மீண்டும் ஒரு கொதி கொதிக்க வைத்து இறக்கி, பரிமாறும் பொழுது மேலே கிரீம் ஊற்றி கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.