மேத்தி மட்ரிஎன்னென்ன தேவை?

மைதா - 1 கப்,
மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை) - 1 டீஸ்பூன்,
ஓமம்/சோம்பு - 1 டீஸ்பூன், உப்பு,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
வெண்ெணய் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மைதா, வெண்ணெய் சேர்த்து பிசறி மேத்தி, ஓமம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடைகளாக அமுக்கி முள் கரண்டியால் குத்தி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.