ஆலு சீலாஎன்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு துருவியது - 4,
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கட்டு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசையாக வார்த்து எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சாஸுடன் பரிமாறவும்.