சுவையான நார்த் இண்டியன் சமையல்...தென்னிந்திய உணவுகளை சாப்பிட்டு சலித்துப்போய் நமக்கு வட இந்திய உணவுகளை சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் ஓட்டல் அல்லது கடைகளுக்குச் சென்றுதான் சாப்பிட வேண்டி இருக்கிறது. ஆனால் வீட்டிலேயே எளிமையான முறையில் வட இந்திய உணவுகளை சமைக்க முடியும் என்று அதன் வழிமுறைகளை நமக்காக இங்கே செய்து காட்டி இருக்கிறார் சமையல் கலைஞர் உஷா லஷ்மணன். இவர் தனது ‘காந்தர்வ்’ கலைக்கூடத்தின் மூலமாக 17

வருடங்களுக்கும் மேலாக ஓவியம், கைவினைப்பொருட்கள், சமையல், கர்நாடக சங்கீதம் போன்ற கலைகளை பயிற்சி அளித்து வருகிறார். டிவி, வானொலி, பத்திரிகைகளிலும் கைவினைப் பொருட்கள் மற்றும் சமையல் பயிற்சிகளை அளித்து வருகிறார் உஷா.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: ஆர்.கோபால்

சமையல் கலைஞர்உஷா லஷ்மணன்