கிரேப் சீத்தாப்பழ மில்க் ஷேக்




என்னென்ன தேவை?

பன்னீர் திராட்சை - 1/2 கப் அல்லது கிரேப் க்ரஷ் - 2 டேபிள்ஸ்பூன்,
சீத்தாப்பழம் அல்லது வாழைப்பழம் - 1,
பால் - 1 கப்,
சர்க்கரை - 1/4 கப்.

எப்படிச் செய்வது?

திராட்சையை சுத்தம் செய்து அரைத்து வடிகட்டி கொள்ளவும். சீத்தாப்பழத்தின் சதைப் பற்றை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் பால் சேர்த்து மிக்சியில் அடித்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து  பரிமாறவும். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து ஜில்லென்று பரிமாறவும்.