டபுள் பீன்ஸ் ஃப்ரைஎன்னென்ன தேவை?

டபுள் பீன்ஸ் - 200 கிராம்,
உப்பு - தேவைக்கு,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
சீரகம் - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

டபுள் பீன்ஸை 8 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து சோம்பு, சீரகம், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, வெந்த டபுள் பீன்ஸ், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வறவறவென வந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டி இறக்கவும்.

குறிப்பு: சுண்டல், காராமணி, அவரைப்பருப்பு, பச்சைப்பயறு, பட்டாணியிலும் ஃப்ரை செய்யலாம்.