வெஜிடபுள் மோர்என்னென்ன தேவை?

வெண்ணெய் நீக்கிய மோர் - 200 மி.லி.,
துருவிய வெள்ளரிக்காய் - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை - சிறிது,
துருவிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெண்ணெய் நீக்கிய மோரில் 50 மி.லி. தண்ணீர் சேர்த்து, துருவிய வெள்ளரிக்காய், கேரட், சீரகம், உப்பு, மல்லித்தழையைச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். மோரைப் புளிக்காமல் குடிக்கவும்.