அத்திப்பழ பால்ஸ்என்னென்ன தேவை?

உலர்ந்த  அத்திப்பழம் - 1,
காய்ந்த திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்,
பேரீச்சம்பழம் - 5,
தேன் - 1 டீஸ்பூன்,
பாதாம் - 5,
முந்திரி - 2,
வால்நட் - 3.

எப்படிச் செய்வது?

அத்திப்பழம், பேரீச்சம்பழம், பாதாம், வால்நட், முந்திரியைப் பொடியாக நறுக்கிக் கொள் ளவும். தேவையானால் காய்ந்த திராட்சையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அலங்கரித்து பரிமாறவும்.