புரூஸீல்ஸ் ஃப்ரைஎன்னென்ன தேவை?

புரூஸீல்ஸ் (சிறு முட்டைக்கோஸ்) - 50 கிராம்,
ப்ரக்கோலி - 100 கிராம்,
காலிஃப்ளவர் - 50 கிராம்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
தேவையானால் குடைமிளகாய் - 1/2,
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி, அதனுடன் ப்ரக்கோலி, புரூஸீல்ஸ், காலிஃப்ளவர், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் உப்பு, மிளகுத்தூள் கலந்து லேசாகத் தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேகவைத்து நன்கு வறவறவென வந்ததும் இறக்கி, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.