ஃப்ரூட் மிக்ஸ் சாலட்என்னென்ன தேவை?

நறுக்கிய ஆப்பிள் - 1,
திராட்சை - 100 கிராம்,
மாதுளை முத்துக்கள் - 1/2 கப்,
நறுக்கிய கிவி பழம் - 1,
தேன் - 1 டேபிள்ஸ்பூன்,
பழுத்த வாழைப்பழம் - 1,
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு அகலமான பாத்திரத்தில் கிவி பழம், சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், ஆப்பிள் துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சையை ஒன்றாக கலந்து எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து பரிமாறவும்.