களரி கறிஎன்னென்ன தேவை?

எலும்புடன் கூடிய ஆட்டு இறைச்சி - 1/4 கிலோ,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 5, தயிர் - 100 மி.லி.,
மஞ்சள் தூள் - 20 கிராம்,
மிளகாய்த்தூள் - 25 கிராம்,
தனியாத்தூள் - 30 கிராம்,
சீரகத்தூள் - 20 கிராம்,
சோம்பு தூள் - 10 கிராம்,
மிளகுத்தூள் - 10 கிராம்,
வாைழக்காய் - 1 துண்டு,
மாங்காய் - 1 துண்டு,
தேங்காய் - 1/2 மூடி,
முந்திரி - 25 கிராம்,
பட்டை - 1 துண்டு,
கிராம்பு - 6,
ஏலக்காய் - 6,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 10 பல்,
உப்பு - தேவைக்கு.
நெய் - 50 மி.லி.,
எண்ணெய் - 200 மி.லி.,
கொத்தமல்லித்தழை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

தேங்காயைத் துருவி முந்திரி சேர்த்து அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். அனைத்து பொருட்களையும் இரு பங்காக பிரித்து வைத்துக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டனை போட்டு எல்லா பொருட்களிலும் பாதியளவு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், சோம்புத்தூள், மிளகுத்தூள், பட்டை, கிராம்பு, ஏலம், அரைத்த இஞ்சி பூண்டு, உப்பு, எண்ணெய், வெங்காயம், கொத்தமல்லித்தழை, தயிர் போட்டு நன்றாக கலந்து மட்டன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடிவைத்து நன்றாக வேகவைக்கவும்.

கடாயில் எண்ணெய் + நெய் சேர்த்து காயவைத்து மீதியுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள் வகைகள், சிறிது உப்பு,
வெந்த மட்டனை சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கி சாதத்துடன் சூடாக பரிமாறவும்.