கோழி பொரிப்பு



என்னென்ன தேவை?

முழு கோழி - 1,
பொரிக்க தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 50 கிராம்,
தனியாத்தூள் - 50 கிராம்,
சீரகத்தூள் - 30 கிராம்,
சோம்பு தூள் - 20 கிராம்,
கரம்மசாலாத்தூள் - 20 கிராம்,
இஞ்சி விழுது, பூண்டு விழுது - தலா 2 டேபிள்ஸ்பூன்,
முட்டை - 1,
உப்பு - தேவைக்கு,
எலுமிச்சைப்பழம் - 1.

எப்படிச் செய்வது?

முழு சிக்கனை நான்கு துண்டுகளாக வெட்டி கோடு போட்டு கழுவி, நீரை வடித்துக் கொள்ளவும். சிக்கனில் முதலில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு பிரட்டவும். பின் எலுமிச்சைச்சாறு, மசாலாத்தூள் வகைகள், முட்டை போட்டு கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி சிக்கனை பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.